/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
30 ஆண்டுகளாக மனை பட்டா கிடைக்காமல் :சீட்டணஞ்சேரி இருளர் மக்கள் தவிப்பு
/
30 ஆண்டுகளாக மனை பட்டா கிடைக்காமல் :சீட்டணஞ்சேரி இருளர் மக்கள் தவிப்பு
30 ஆண்டுகளாக மனை பட்டா கிடைக்காமல் :சீட்டணஞ்சேரி இருளர் மக்கள் தவிப்பு
30 ஆண்டுகளாக மனை பட்டா கிடைக்காமல் :சீட்டணஞ்சேரி இருளர் மக்கள் தவிப்பு
ADDED : பிப் 20, 2025 07:32 PM
சீட்டணஞ்சேரி:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம்.
இக்கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக 32 இருளர் குடும்பத்தினர், நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு மனை பட்டா இல்லாததால், அரசு இலவச வீடுகள் உள்ளிட்ட சலுகைகள் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வருவாய்த்துறை மற்றும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடத்தில் தொடர்ந்து மனு அளித்தும், நேரில் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி இருளர் மக்கள் கூறியதாவது:
சீட்டணஞ்சேரி, புறம்போக்கு நிலப்பகுதியில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
இக்கிராமத்திற்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு நிலத்தில், எங்களது 32 குடும்பத்தினருக்கும் மனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அத்தோப்பு புறம்போக்கு நிலத்தை சுற்றிலும், தனியார் விவசாய நிலங்கள் மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் உள்ளது.
இந்நிலங்கள் வழியாக தோப்பு புறம்போக்கு நிலத்திற்கு செல்ல ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, பாதை வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் பட்டா வழங்காமல் கிடப்பில் உள்ளது.
எனவே, எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க சம்பந்தப்டட்ட துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.