/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காகத்தின் உடலை மீட்டவர் மின்சாரம் பாய்ந்து பலி
/
காகத்தின் உடலை மீட்டவர் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : செப் 24, 2024 03:47 AM

புழல்: புழல், விநாயகபுரம் வி.எம்.கே., நகரைச் சேர்ந்தவர் ஜெபராஜ், 28; தனியார் வங்கி ஊழியர்.
நேற்று காலை, இவரது வீட்டின் முன் இருந்த உயர் அழுத்த மின்மாற்றியில் சிக்கி, ஒரு காகம் இறந்து தொங்கி கொண்டிருந்தது.
இதை பார்த்த அவர், வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்துக் கொண்டு, மாடிக்கு சென்றார். அங்கிருந்து, காகத்தின் உடலை அகற்ற மின்மாற்றி கம்பியில் தட்டினார். அப்போது கம்பி மீது மின்சாரம் பாய்ந்து, ஜெபராஜ் துாக்கி வீசப்பட்டார்.
குடும்பத்தினர்ஜெபராஜை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில், வரும்வழியிலே ஜெபராஜ் இறந்தது தெரிந்தது. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

