/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மீன் பிடிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி
/
மீன் பிடிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி
ADDED : செப் 18, 2024 08:15 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், கன்னியம்மன் கோவில் அருகே தட்டான் குளம் உள்ளது. அப்பகுதி கால்நடை தாகம் தீர்க்கவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இக்குளம் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, இந்த குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதை அப்பகுதியினர் கண்டனர். உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்களை வரவைத்து உடலை மீட்டனர்.
தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இறந்தவர் உத்திரமேரூர் அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணி, 56; கூலி விவசாயி என்பது தெரியவந்துள்ளது.
இவர், தூண்டில் வாயிலாக மீன்பிடிப்பதற்காக உத்திரமேரூர், தட்டான்குளம் பகுதிக்கு சென்றதாகவும், அப்போது தவறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.