/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லாங்குழியான குண்டுபெரும்பேடு சாலை
/
பல்லாங்குழியான குண்டுபெரும்பேடு சாலை
ADDED : அக் 22, 2025 11:19 PM

ஸ்ரீபெரும்புதுார்: தொடர் மழையினால் குண்டுபெரும்பேடு சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக மாறி உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையில், கொளத்துாரில் இருந்து பிரிந்து வெள்ளாரை, குண்டுபேரும்பேடு வழியாக, கண்ணந்தாங்கல் செல்லும் சாலை வழியே, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
கண்ணந்தாங்கல், குண்டுபெரும்பேடு, கடுவஞ்சேரி உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை, சமீப காலமாக ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
தற்போது, ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கன மழையினால், சாலை நடுவே உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் பல்லாங்குழியான சாலையில் செல்லும் போது, விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சேதமான சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.