/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்நகர் தெருக்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் வாயிலாக வெளியேற்றம்
/
மின்நகர் தெருக்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் வாயிலாக வெளியேற்றம்
மின்நகர் தெருக்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் வாயிலாக வெளியேற்றம்
மின்நகர் தெருக்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் வாயிலாக வெளியேற்றம்
ADDED : அக் 22, 2025 11:19 PM

கோனேரிகுப்பம்: -காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின்நகர் தெருக்களில் தேங்கிய மழைநீரை, ஊராட்சி நிர்வாகத்தினர் மின் மோட்டார் மற்றும் ஆயில் இன்ஜின் மோட்டார் வாயிலாக வெளியேற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மின்நகரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். ஆண்டுதோறும் பருவமழையின்போது, மின் நகரில் பல தெருக்களில் மழைநீர் சூழ்வது வாடிக்கையாக உள்ளது.
இப்பகுதியில் சில இடங்களில் வடிகால்வாய் வசதி இருந்தும், மழைகாலங்களில் வேகமாக மழைநீர் வெளியேறும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் இரு நாட்களாக பெய்த மழையின் காரணமாக மின்நகரில் உள்ள பல தெருக்களில் மழைநீர் சூழ்ந்தது.
இதனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில், மின் மோட்டார் மற்றும் ஆயில் இன்ஜின் மோட்டார் வாயிலாக, மின்நகர் தெருக்களில் தேங்கிய மழைநீர் உறிஞ்சப்பட்டு, மஞ்சள்நீர் கால்வாய் வாயிலாக வெளியேற்றி வருகின்றனர்.