/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாவல் பழம் சீசன் துவக்கம் கிலோ ரூ.180 ஆக குறைவு
/
நாவல் பழம் சீசன் துவக்கம் கிலோ ரூ.180 ஆக குறைவு
ADDED : ஜூலை 12, 2025 12:55 AM

காஞ்சிபுரம்:நாட்டு ரக நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப் பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நாட்டு ரக நாவல் பழம் பயிரிடப்படுகிறது.
இம்மாவட்டங்களில் நாட்டு ரக நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளதால், காஞ்சிபுரத்திற்கு வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், காஞ்சிபுரம் வீதிகளில், நடமாடும் வாகனங்களில், கிலோ நாட்டு ரக நாவல் பழம், 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த நாவல் பழ வியாபாரி மீரா செந்தில் கூறியதாவது:
ஆந்திராவில் விளையும் குண்டு ரகமான நாவல் பழத்தைவிட காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் விளையும் நாவல் பழம் அளவில் சற்று சிறியதாக இருக்கும். இதை நாட்டு நாவல் என அழைக்கின்றனர்.
தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ 250 ரூபாய் வரை விற்கப்பட்ட நாவல் பழம் தற்போது கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட நாட்டுரக நாவல் பழத்தை ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

