/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவரின் உயிரை பறித்த 'பப்ஜி கேம்'
/
மாணவரின் உயிரை பறித்த 'பப்ஜி கேம்'
ADDED : பிப் 05, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடபழனி : கோடம்பாக்கம், வெங்கீஸ்வரர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன், 22; தனியார் கல்லுாரி மாணவர். இவர், பகுதி நேர வேலையாக உணவு வினியோகம் செய்து வந்தார்.
நேற்று முன்தினம், மொபைல் போனில் அதிக நேரமாக 'பப்ஜி கேம்' விளையாடி உள்ளார். இதை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பிரவீன், நேற்று துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார்.
பணி முடிந்து அவரது சகோதரர் வீடு திரும்பியபோது, வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரவீன் தற்கொலை செய்தது தெரிய வந்தது.
வடபழனி போலீசார் உடலை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

