/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் மாயம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்
/
மழைநீர் கால்வாய் மாயம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்
ADDED : டிச 21, 2024 12:36 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் வாடாதவூர் கிராமத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு வடிகால்வாய் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது, முறையாக பராமரிப்பு இல்லாததால், வடிகால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.
இதனால், மழைநீர் வடிந்து செல்லாமல், அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனால், கால்வாயில் தொற்றுநோய் பரப்பும் கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் வடிகால்வாயை சீரமைக்காமல் மெத்தனமாக உள்ளது. எனவே, மண் தூர்ந்த வடிகால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

