
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி தும்பவனம் மாரியம்மன் கோவில் வழியாக, ஓரிக்கை மிலிட்டரி சாலைக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் குறுக்கே ராட்சத குழாய் பதிக்கப்பட்டு சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் வழியாக சென்ற மழைநீரால் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.