/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் கொளுத்துகிறது வெயில் வெளியில் நடமாடுவோர் அவதி
/
காஞ்சியில் கொளுத்துகிறது வெயில் வெளியில் நடமாடுவோர் அவதி
காஞ்சியில் கொளுத்துகிறது வெயில் வெளியில் நடமாடுவோர் அவதி
காஞ்சியில் கொளுத்துகிறது வெயில் வெளியில் நடமாடுவோர் அவதி
ADDED : ஜூலை 09, 2025 01:26 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சில நாட்களாக, கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரத்தைபோன்று வெயில் கொளுத்தி வருவதால், வெளியில் நடமாடுவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், மே 4ம் தேதி துவங்கி, மே 28ம் தேதி நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து இருந்தது.
இந்நிலையில், சில நாட்களாக, காஞ்சிபுரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது பாரன்ஹீட் அளவில் 109 டிகிரியாகும்.
இதனால், காஞ்சிபுரம் நகரில் அனல்காற்று வீசியதால், இருசக்கர வாகன ஓட்டிகள், தலைசுமை வியாபாரிகள், நடைபாதை, தள்ளுவண்டி வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள், போக்குவரத்து காவலர்கள், போஸ்ட்மேன், கூரியர் ஊழியர்கள், வீடுகளுக்கு சிலிண்டர், வாட்டர் கேன் போடுவோர், உணவு டெலிவரி செய்வோர் என, வெயிலில் நடமாடியோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதனால், வெயிலில் நடமாடியோர் வெயிலில் உடலை பாதுகாக்கும் வகையில், குடை பிடித்தும், தலையை துணியால் மூடியபடியும் சென்றனர்.
வெயிலின் தாகத்தை தணிக்க நீர்மோர், குளிர்பானம், ஜூஸ் கடைகளில் பொதுமக்கள் கூட்டத்தை காண முடிந்தது. மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளுக்கும் நேற்று காஞ்சியில் கொளுத்திய வெயிலுக்கு பாதிப்புக்குள்ளாகின.
மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளும் நிழல்தரும் இடங்களை தேடி தஞ்சமடைந்தன.
அக்னி நட்சத்திரத்தைபோன்று, சூரிய பகவான் சில நாட்களாக காஞ்சிபுரத்தை சுட்டெரித்து வருவதால், வருண பகவான் கருணையால் மழை பெய்து, குளிர்ச்சி நிலவுமா என, காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

