/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிணற்றில் விழுந்த மகன்; காப்பாற்ற குதித்த தாயும் பலி
/
கிணற்றில் விழுந்த மகன்; காப்பாற்ற குதித்த தாயும் பலி
கிணற்றில் விழுந்த மகன்; காப்பாற்ற குதித்த தாயும் பலி
கிணற்றில் விழுந்த மகன்; காப்பாற்ற குதித்த தாயும் பலி
ADDED : ஜன 15, 2024 04:20 AM

செய்யூர், : செய்யூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராணி, 35. இவரது மகன் பிரவீன், 15; தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்.
நேற்று காலை 10:00 மணிக்கு, கிராமத்தின் அருகே வயல்வெளியில் உள்ள கிணற்றில் துணி துவைப்பதற்காக, தன் மகன் பிரவீன்குமாருடன் சென்றார்.
அப்போது, கிணற்றின் அருகே அமர்ந்து இருந்த பிரவீன்குமார், தவறி கிணற்றில் விழுந்தார். மகனை காப்பாற்றுவதற்காக, கூச்சலிட்டு விமல்ராணியும் தண்ணீரில் குதித்தார்.
இதையடுத்து, அருகே உள்ள கிணற்றில் குளித்த சிறுவர்கள் சத்தம் கேட்டு வந்தபோது, இருவரும் தத்தளித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர்.
அதன்பின், அணைக்கட்டு போலீசார் மற்றும் செய்யூர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்து, இளைஞர்கள் நீரில் மூழ்கி இருவரையும் மீட்க முயற்சி செய்தனர்.
ஆனால், கிணறு முழு கொள்ளளவு எட்டியுள்ளதால், மீட்க முடியவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் மீட்பு படையினர், இருவரையும் சடலமாக மீட்டனர்.