/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச பெருவிழா நிறைவு
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச பெருவிழா நிறைவு
ADDED : பிப் 16, 2025 02:52 AM

பெருநகர்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச பெருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், தினமும் காலை, மாலையில், சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார். ஐந்தாம் நாள் உற்சவமான, பிப்., 6ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் உற்சவமான பிப்.,8ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, பிப்., 10ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது.
இதில், 10ம் நாள் தைப்பூச ஆற்று திருவிழாவில், 25 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளித்தனர்.
இதில் 12ம் நாள் உற்சவமான கடந்த 13ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 13ம் நாள் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு மாவடி சேவை உற்சவம் நடந்தது.
இதில், பட்டுவதனாம்பிகையுடன், பிரம்மபுரீஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். நேற்று திருமுறை திருவிழாவுடன், கடந்த 14 நாட்களாக நடந்த, தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.