/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் குட்டையாக மாறிய தாலுகா அலுவலக வளாகம்
/
மழைநீர் குட்டையாக மாறிய தாலுகா அலுவலக வளாகம்
ADDED : செப் 26, 2024 12:16 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்துாரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு, பட்டா மாற்றம், உட்பிரிவு செய்தல், பட்டா திருத்தம், நஞ்சை நிலங்களுக்கு தடையில்லா சான்று, பட்டா மேல்முறையிடு விசாரணை உளளிட்ட பல்வேறு சேவைகளுக்காக நாள்தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்த மழையினால், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலக நுழைவாயில், மழைநீர் குட்டை போல உள்ளது.
இப்பகுதியில் மழைநீர் வடிய வழியில்லாததால், இரண்டு வாரத்திற்கு மேலாக தேங்கியுள்ள மழைநீரால், தாலுகா அலுவலகத்திற்கு வருவோர் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், மழைநீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால், அப்பகுதியல் சுகாதாகர சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, தாலுகா அலுவலக வளாக நுழைவாயிலில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் அமைக்க நடவடிக்கை வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.