/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நிழற்குடை அமைக்கக்கும் பணி அதிகாரிகள் பதிலால் குழப்பம்
/
நிழற்குடை அமைக்கக்கும் பணி அதிகாரிகள் பதிலால் குழப்பம்
நிழற்குடை அமைக்கக்கும் பணி அதிகாரிகள் பதிலால் குழப்பம்
நிழற்குடை அமைக்கக்கும் பணி அதிகாரிகள் பதிலால் குழப்பம்
ADDED : பிப் 16, 2025 08:24 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில், சங்கராபுரம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தத்தின் இருபுறமும் பயணியர் நிழற்கூரை கட்டடங்கள் இருந்தன.
இந்த பயணியர் நிழற்கூரை கட்டடங்களில் காத்திருந்து சங்கராபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மார்க்கங்களில் செல்வோர், பேருந்து வழியாக சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்- வாலாஜாபாத்- செங்கல்பட்டு இரு வழி சாலையில் இருந்து, நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிக்கு, செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் மார்க்கமாக இருந்த பயணியர் நிழற்கூரை கட்டடம் அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக தனியார் பொறியியல் கல்லுாரி அருகே அமைக்கப்பட உள்ளது.
இதனால், சங்கராபுரம் கிராம மக்கள் தனியார் கல்லுாரி அருகே இறங்கி கூட்டு சாலைக்கு நெடுந்துாரம் நடந்து சென்று, சங்கராபுரம் கிராமத்திற்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. இது, கிராமப்புற பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இதை தவிர்க்க, ஏற்கனவே இருந்த இடத்திலேயே பயணியர் நிழற்கூரை கட்டடம் கட்டித்தர வேண்டும் என, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளருக்கு சங்கராபுரம் கிராம மக்கள் மனு அளித்து உள்ளனர்.
இந்த மனுவிற்கு, நெடுஞ்சாலை துறையினர், இடவசதி இல்லாததால், 90 மீட்ட ர் துாரத்தில் பேருந்து நிறுத்தம் அமைய உள்ளது. நீங்கள் கூறும் இடத்தில் இடவசதி இல்லாததால் அங்கு பேருந்து நிறுத்தம் அமைக்க முடியாது என, பதிலை அனுப்பி உள்ளனர். இது கிராம வாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

