/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளையனார்வேலுாரில் தெப்போற்சவம் நிறைவு
/
இளையனார்வேலுாரில் தெப்போற்சவம் நிறைவு
ADDED : பிப் 08, 2025 09:23 PM
இளையனார்வேலுார்:காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் செய்யாற்கரையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், தை மாதத்தில் தெப்போற்சவம் மூன்று நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டு, 13ம் ஆண்டு தெப்போற்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது. தெப்போற்சவத்தையொட்டி தினமும் மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு நாதஸ்வர இன்னிசையுடன், அதிர்வேட்டுகள் முழங்க, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி எழுந்தருளி குளத்தில், மூன்று முறை உலா வந்தார்.
இரண்டாம் நாளான நேற்று முன்தினம் ஐந்து முறையும், தெப்போற்சவத்தின் நிறைவு நாளான நேற்று ஏழு முறையும் உலா வந்ததார்.
விழாவில், இளையனார்வேலுார், சித்தாத்துார், நெய்யாடுபாக்கம், வள்ளிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் பங்கேற்னர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் கதிரவன், அறங்காவலர் குழுவினர் இணைந்து செய்திருந்தனர்.

