/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சின்னபின்னமான ஸ்ரீபெரும்புதுார் சாலை ஒவ்வொரு மழைக்கும் இதே கதிதான்
/
சின்னபின்னமான ஸ்ரீபெரும்புதுார் சாலை ஒவ்வொரு மழைக்கும் இதே கதிதான்
சின்னபின்னமான ஸ்ரீபெரும்புதுார் சாலை ஒவ்வொரு மழைக்கும் இதே கதிதான்
சின்னபின்னமான ஸ்ரீபெரும்புதுார் சாலை ஒவ்வொரு மழைக்கும் இதே கதிதான்
ADDED : டிச 04, 2024 12:37 AM

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு, ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைபாக்கம், வல்லம் வடகால், ஒரகடம் உள்ளிட்ட ஐந்து சிப்காட் தொழில் பூங்காங்கால் உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மக்களில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படமாலே உள்ளது. பேரூட்சிக்குட்பட்ட பல இடங்களில் உட்புற சாலைகள் மோசமாக காணப்படுகிறது.
குறிப்பாக, பட்டுநுால் சத்திரம், 7 வது வார்டுக்குட்பட்ட விக்னேஷ் நகர், சரளா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள், ஒவ்வொரு மழைக்கும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில், பாதாள சாக்கடை பணிக்கு பின் சாலைகள் சீரமைக்கப்படாதால், மழையின் போது சாலை உள்வாங்கியும், சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் மழை விட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், பல்வேறு சாலைகளில் தேங்கி மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. மேலும், மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் பகுதி மக்கள் உள்ளனர்.
எனவே, இப்பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, நிரந்தர தீர்வாக, வடிகால் மற்றும் சாலைகளை சீரமைக்க பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.