/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாட்டு தொழுவமாக மாறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதி
/
மாட்டு தொழுவமாக மாறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதி
மாட்டு தொழுவமாக மாறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதி
மாட்டு தொழுவமாக மாறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதி
ADDED : ஜன 21, 2025 01:13 AM

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அடுத்த ஆரியபெரும்பாக்கம் ஊராட்சியில், செம்பரம்பாக்கம் காலனி துணை கிராமம் உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டி அங்கன்வாடி மையம், நுாலக கட்டடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அருகே ஆடு, மாடுகளை கட்டி வருகின்றனர். குறிப்பாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, மாடுகளை கட்டி வருவதால், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர்.
மேலும், அங்கன்வாடி மையம் அருகே சாண குவியலால், நோய் பரவும் அபாயம் உள்ளது என, அப்பகுதி வாசிகள் புலம்பி வருகின்றனர். எனவே, செம்பரம்பாக்கம் காலனி பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே கட்டப்படும் மாடுகளை வேறு இடத்தில் கட்ட வேண்டும்.
மேலும், அங்கன்வாடி மையம் அருகே கொட்டியுள்ள சாண குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

