/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் தாசில்தார் குடியிருப்பில் வசிக்காததால் பாழாகும் அவலம்
/
உத்திரமேரூர் தாசில்தார் குடியிருப்பில் வசிக்காததால் பாழாகும் அவலம்
உத்திரமேரூர் தாசில்தார் குடியிருப்பில் வசிக்காததால் பாழாகும் அவலம்
உத்திரமேரூர் தாசில்தார் குடியிருப்பில் வசிக்காததால் பாழாகும் அவலம்
ADDED : ஜூலை 09, 2025 01:43 AM

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் தாசில்தார், குடியிருப்பில் 10 ஆண்டுகளாக வசிக்காததால், பயன்பாடின்றி பாழாகி வருகிறது.
உத்திரமேரூரில் முருகன் கோவில் அருகே தாசில்தார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு, வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, தாசில்தாராக பணியாற்றியவர்கள் சிலர் தங்கி வந்தனர்.
தற்போது, 10 ஆண்டுகளாக உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தாசில்தாராக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தினமும் குடியிருப்பில் தங்காமல், அருகிலுள்ள சொந்த ஊர்களுக்கு சென்று விடுகின்றனர்.
இதனால், இந்த குடியிருப்பை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து கட்டடம் பாழடைந்து வருகிறது. மேலும், அப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.
மேலும், இக்கட்டடம் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அதற்காக செலவிடப்பட்ட அரசு நிதி வீணாகி வருகிறது.
எனவே, உத்திரமேரூர் தாசில்தார் குடியிருப்பைச் சீரமைத்து, அதை பயன்படுத்த வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வருவாய் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் தாசில்தார் குடியிருப்பு பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இது பயன்படுத்தாமல் இருப்பதால் கட்டடம் பாழாகும் சூழல் உள்ளது.
'எனவே, குடியிருப்பு கட்டடத்தை சீரமைத்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.