/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 18 அடியானது
/
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 18 அடியானது
ADDED : நவ 26, 2024 11:59 PM

குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி.,யும், நீர்மட்டம் 24 அடி ஆழமும் உடையது.
பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு, ஒரு மாதத்திற்கு மேலாக வினாடிக்கு 300 கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதனால், ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று காலை, மழை துவங்குவதற்கு முன்பே ஏரியில் நீர்மட்டம் 18.08 அடியாகவும், கொள்ளளவு 2.153 டி.எம்.சி.,யாக இருந்தது.
காலை 10:00 மணிக்கு மேல் மழை துவங்கி இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. 21 அடியை எட்டினால், பாதுகாப்பு கருதி ஏரியின் உபரி நீர் திறப்பது வழக்கம்.
குறைந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலத்தால் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.