/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரிவாய் மணவாள பெருமாளுக்கு வரும் 7ல் திருக்கல்யாண உத்சவம்
/
ஏரிவாய் மணவாள பெருமாளுக்கு வரும் 7ல் திருக்கல்யாண உத்சவம்
ஏரிவாய் மணவாள பெருமாளுக்கு வரும் 7ல் திருக்கல்யாண உத்சவம்
ஏரிவாய் மணவாள பெருமாளுக்கு வரும் 7ல் திருக்கல்யாண உத்சவம்
ADDED : ஏப் 02, 2025 08:53 PM
முத்தியால்பேட்டை:காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது.
சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை, கிராமவாசிகளும், அழகிய மணவாள பெருமாள் சேவா டிரஸ்ட் மற்றும் உபயதாரர்கள் வாயிலாக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு, ஏப்., மாதம், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இதையொட்டி, மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உத்சவம், வரும் 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு அங்குரார்ப்பணம், கலசபிரதிஷ்டையுடன் துவங்குகிறது.
மாலை 6:00 மணிக்கு புலவர் ராதா நாராயணன் சொற்பொழிவாற்றுகிறார். 6ம் தேதி காலை 8:00 மணிக்கு வருஷாபிஷேகமும், புஷ்பசாத்துபடியும், மதியம் 12:00 மணிக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட உள்ளது.
வரும் 7ம் தேதி, மாலை 4:00 மணிக்கு திருமண சீர்வரிசை ஊர்வலமும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

