/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெந்நீர் ஊற்றிய மனைவி குடி போதை கணவர் பலி
/
வெந்நீர் ஊற்றிய மனைவி குடி போதை கணவர் பலி
ADDED : அக் 04, 2024 07:20 PM
குன்றத்துார்:தாம்பரம் அருகே, சோமங்கலம் அடுத்த புதுநல்லுாரில் வசிப்பவர் தேவா, 28; கட்டுமான தொழிலாளர். இவரது மனைவி முத்துசெல்வி, 26. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
குடி பழக்கத்திற்கு அடிமையான தேவா, தினமும் போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 30ம் தேதி, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முத்துசெல்வி, சாப்பாடு செய்ய அடுப்பில் வைத்திருந்த வெந்நீரை எடுத்து, தேவா மீது ஊற்றினார். இதில், உடல் வெந்து, பலத்த காயமடைந்த தேவாவை, அருகே வசிப்போர் மீட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த தேவா, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். சோமங்கலம் போலீசார், முத்துசெல்வியை கைது செய்து விசாரிக்கின்றனர்.