/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில், அரசு கட்டடங்களின் பூட்டை உடைத்து திருட்டு
/
கோவில், அரசு கட்டடங்களின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : மார் 15, 2025 06:42 PM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆயகணகொளத்துாரில் மூன்று கோவில்களின் உண்டியல் மற்றும் அரசு அலுவலகங்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம் கைவரிசை காட்டி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஆயக்கொளத்துார் கிராமத்தில், ஞானவல்லி தாயார் உடனுறை பீமேஸ்வரர் கோவில், பொன்னியம்மன் கோவில், தில்லை விநாயகர் கோவில் என, மூன்று கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுமட்டும் இல்லாமல், அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், கால்நடை மருத்துவமனை, பம்ப் ஆப்ரேட்டர் ரூம் ஆகிய இடங்களிலும் பூட்டை உடைக்கப்பட்டு உள்ளன.
தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், திருட்டு நடந்த கோவில் மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.