/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் குப்பை கொட்டி குவிப்பு வல்லத்தில் மழைநீர் செல்வதில் சிக்கல்
/
கால்வாயில் குப்பை கொட்டி குவிப்பு வல்லத்தில் மழைநீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் குப்பை கொட்டி குவிப்பு வல்லத்தில் மழைநீர் செல்வதில் சிக்கல்
கால்வாயில் குப்பை கொட்டி குவிப்பு வல்லத்தில் மழைநீர் செல்வதில் சிக்கல்
ADDED : செப் 28, 2024 10:51 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் பகுதியில், சாலையோரங்களில் இறைச்சி மற்றும் உணவு கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன.
இதனால், கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியை கடக்கும்போது வாகன ஓட்டிகள் முகம் சுளிக்கின்றனர்.
நாய் மற்றும் மாடுகள் கூட்டமும் கழிவுகளில் இரை தேடி வருகின்றன. இவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டபடி அங்கு சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றன.
கழிவுகளை உண்பதற்காக சாலையின் குறுக்கே சென்று வரும் நாய்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, அவ்வப்போது விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர்.
மேலும், சாலையோரம் உள்ள மழைநீர் செல்லும் சிறு பாலம் மற்றும் கால்வாயில் கொட்டும் கழிவுகளால் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வல்லம் மற்றும் வல்லக்கோட்டை பகுதிகளில் இயங்கிவரும் இறைச்சி மற்றும் உணவகங்கள் நடத்துபவர்கள், இரவு நேரங்களில் கழிவுகளை கொண்டு சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.
எனவே, பருவ மழை துவங்கும் முன், மழைநீர் கால்வாயை சீரமைத்து, சாலையோரங்கள் மற்றும் நீர் வழித்தடத்தில் கழிவுகளை கொட்டுபவர்களை கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.