/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி
/
இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி
இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி
இரு வீடுகளில் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டால் பீதி
ADDED : ஜன 05, 2025 01:37 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பிள்ளை, 73. இவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி மல்லிகா, 68, என்பவருடன், வீட்டு தாழ்வாரத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
காலை எழுந்து பார்த்தப்போது, பீரோ உடைக்கப்பட்டு, 7 சவரன் நகை மற்றும் 32,000 ரூபாயை திருடு போனது தெரிந்தது. அதேபோல், அதே பகுதியில் உள்ள ராமாஞ்சியம்மாள், 72, என்பவரின் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் இருந்த இரு வெள்ளி குத்துவிளக்கு, ஒரு காமாட்சி விளக்கு மற்றும் ஒரு வெள்ளித்தட்டு ஆகியவை மர்ம நபர்கள் திருடி சென்றனர். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். உத்திரமேரூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால், அப்பகுதிவாசிகள் பீதியில் உள்ளனர்.