/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருமுக்கூடல் கோவில் நிலம் ரூ.2.87 லட்சத்திற்கு குத்தகை ஏலம்
/
திருமுக்கூடல் கோவில் நிலம் ரூ.2.87 லட்சத்திற்கு குத்தகை ஏலம்
திருமுக்கூடல் கோவில் நிலம் ரூ.2.87 லட்சத்திற்கு குத்தகை ஏலம்
திருமுக்கூடல் கோவில் நிலம் ரூ.2.87 லட்சத்திற்கு குத்தகை ஏலம்
ADDED : நவ 06, 2025 10:53 PM
உத்திரமேரூர்: திருமுக்கூடலில், அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலின் 31 ஏக்கர் நிலம், சாகுபடி குத்தகை ஏலம் 2.87 லட்சம் ரூபாய்க்கு விடப்பட்டது.
உத்திரமேரூர் தாலுகா, திருமுக்கூடலில் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான இக்கோவிலுக்கு, சொந்தமாக 31 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஒவ்வொரு ஆண்டும் குத்தகைக்கு விடப்படுகிறது.
இந்தாண்டிற்கான கோவில் நிலம் குத்தகை ஏலம் உத்திரமேரூர் சரக ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ப்ரீத்திகா முன்னிலையில் நேற்று விடப்பட்டது.
அப்போது, கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம், 2.87 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோவில் செயல் அலுவலர் ஈகுல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.