/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் 4.6 செ.மீ., மழை பதிவு
/
வாலாஜாபாதில் 4.6 செ.மீ., மழை பதிவு
ADDED : நவ 06, 2025 10:59 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததில், அதிகபட்சமாக வாலாஜாபாதில் 4.6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய இரு இடங்களிலும் கனமழை பெய்ததால், நகரின் முக்கிய சாலைகளில், மழைநீர் ஆறாக ஓடியது.
மாவட்டத்தில் காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, அதிக பட்சமாக வாலாஜாபாதில் 4.6 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 3.6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
ஸ்ரீபெரும்புதுாரில் 3.1 செ.மீ., உத்திரமேரூரில் 1.6 செ.மீ., செம்பரம்பாக்கத்தில் 1.2 செ.மீ., குன்றத்துாரில் 0.8 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.

