/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு
/
கழுத்தை அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு
ADDED : நவ 06, 2025 11:11 PM
குன்றத்துார்: குன்றத்துார் பேருந்து நிலையத்தில், தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்றத்துார் பேருந்து நிலையத்தில், நேற்று காலை நின்றிருந்த, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தன் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டார். இதை பார்த்த பயணியர், அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்துார் போலீசார், அந்த இளைஞரை மீட்டு, அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த இளைஞர், குன்றத்துார் அருகே உள்ள சிறுகளத்துார் பகுதியை சேர்ந்த ஆகாஷ், 21, என்பதும், தன் தாயிடம் சண்டையிட்டதால், மது போதையில் கழுத்தை அறுத்துக்கொண்டது தெரிய வந்தது. மருத்துவனையில் சிகிச்சை பெற்ற ஆகாஷ், பின் வீடு திரும்பினார்.

