/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகன நிறுத்துமிடமான திருப்புலிவனம் சமுதாய கூடம்
/
வாகன நிறுத்துமிடமான திருப்புலிவனம் சமுதாய கூடம்
ADDED : மார் 16, 2025 01:07 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், வசிப்போர் திருமணம், காதணி விழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த, 25 ஆண்டுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டது.
தற்போது, சமுதாய கூடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. மழை நேரங்களில் கான்கிரீட் கூரையில் இருந்து தண்ணீர் கசிந்து சொட்டுகிறது.
மேலும், சேதமடைந்துள்ள சமுதாயகூட கட்டடம் எந்நேரத்திலும் இடிந்து விழும் என்பதால், நிகழ்ச்சி நடக்கும் நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
எனவே, சேதமடைந்துள்ள சமுதாய கூடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.