/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை
/
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இன்று திருவிளக்கு பூஜை
ADDED : பிப் 01, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்பேட்டையில், வடதிருக்கடவூர் என அழைக்கப்படும், அபிராமியம்மை உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் உலக நன்மை, குடும்ப ஒற்றுமை, செல்வம் பெருக, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 21வது ஆண்டு திருவிளக்கு பூஜை, இன்று, மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. பூஜையில் பங்கேற்போருக்கு அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்களும், பிரசாதம் கோவிலில் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது..

