/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை
/
தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 12:16 AM

வாலாஜாபாத் : வாலாஜாபாத் ஒன்றியம் தோண்டாங்குளம் கிராமத்தில் 110 ஏக்கரில் ஏரி உள்ளது. இந்த ஏரி வாயிலாக 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரியில், அவ்வப்போது மதகு சீர் செய்தல், கரை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், பல ஆண்டுகளாக ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி துார்வாராமல் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் ஏரியில் குறைவான தண்ணீரேசேகரமாகிறது.
இதனால், சாகுபடி காலத்தில் இறுதிக்கட்ட பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுவதாக, அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே, தோண்டாங்குளம்ஏரியை துார்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

