/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மொபைல் போன் கடையை உடைத்து திருடியவர்கள் கைது
/
மொபைல் போன் கடையை உடைத்து திருடியவர்கள் கைது
ADDED : ஜன 03, 2025 02:15 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்தவர் பிரேம் குமார், 35. ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, மொபைல் போன் கடை வைத்துள்ளார்.
கடந்த டிச., 21ம் தேதி இரவு 10:00  மணிக்கு, பிரேம் கடையை பூட்டி விட்டு சென்றார். மறு நாள் காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது, ஷெட்டரின் பூட்டு உடைக்கப்டட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, கடையில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன் திருடப்பட்டிருந்து தெரிந்தது.
இது குறித்து, பிரேம் குமார் ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் சிசிடிவி காட்சிளை ஆய்வு செய்து கொள்ளயர்களை தேடிவந்த நிலையில், சென்னையை சேர்ந்த யுவராஜ், 20, பாபு, 20, இருவரை நேற்று கைது செய்தனர்.

