/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்
/
மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்
மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்
மூன்று துறையினர் இணைந்து முறிந்த மரக்கிளைகள் அகற்றம்
ADDED : அக் 17, 2024 12:55 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், அழகிய சிங்கபெருமாள் கோவில் சன்னிதி தெருவில், 20 ஆண்டுகள் பழமையான பெருங்கொன்றை மரம் ஒன்று வீடுகளை ஒட்டியுள்ள பகுதியில் இருந்தது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இம்மரத்தின் கிளைகள் முறிந்து விழும் நிலையில் இருந்தன.
இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் சேதமடையும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியினர், மாவட்ட நிர்வாகத்திற்கு நேற்று தகவல் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, காஞ்சிபுரம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையில் 9 பேர், நேற்று, முறிந்து விழும் நிலையில் இருந்த மரக்கிளைகளை மரத்தை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
மரக்கிளை அருகில் மின் ஒயர்கள் சென்றதாலும், மரக்கிளைகள் அதிக தடிமன் கொண்டதாக இருந்ததாலும், மின்வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் ஒத்துழைப்புடன், முறிந்து விழும் நிலையில் இருந்த மரக்கிளைகளை அகற்றினர்.