ADDED : நவ 20, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:சுங்குவார்சத்திரத்தில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சுங்குவார்சத்திரம் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சுங்குவார்சத்திரம் போலீசார் நேற்று, பஜாரில் ஆய்வு செய்த போது, பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த பாண்டியன், 24, மொளச்சூர் பகுதியைச் சேர்ந்த அரசு, 24, நந்தகுமார், 25, ஆகிய மூன்று பேர் லாட்டரி சீட்டுகளை விற்று வந்தது தெரிந்தது.
அவர்களை சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.