/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'
/
மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'
மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'
மண்டல அளவிலான கபடி போட்டி திருமலை கல்லுாரி 'சாம்பியன்'
ADDED : ஆக 25, 2025 11:25 PM

காஞ்சிபுரம், கீழம்பியில் நடந்த மண்டல அளவில், கல்லுாரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில், திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், இன்டர் பாலிடெக்னிக் அத்லடிக் அசோசியேஷன்' சார்பில், மண்டல அளவில், கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கபடி போட்டி, கடந்த 20, 21ம் தேதிகளில் நடந்தது.
இப்போட்டியில், காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த 20 கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், ஆண்கள் பிரிவு கபடி போட்டியில், கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.