/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒத்தையடி பாதையாக மாறிய திருமுக்கூடல் ஏரிக்கரை சாலை
/
ஒத்தையடி பாதையாக மாறிய திருமுக்கூடல் ஏரிக்கரை சாலை
ஒத்தையடி பாதையாக மாறிய திருமுக்கூடல் ஏரிக்கரை சாலை
ஒத்தையடி பாதையாக மாறிய திருமுக்கூடல் ஏரிக்கரை சாலை
ADDED : செப் 30, 2024 05:27 AM

உத்திரமேரூ :
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் கிராமத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின்கீழ், 120 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 250 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
இந்த ஏரிக்கரை மீது இருபுறமும், பல வகையான செடி, கொடிகள் வளர்ந்து பரவி காணப்படுகின்றன. இதனால், போக்குவரத்திற்கு ஒத்தையடி பாதையாக மட்டுமே சாலை உள்ளது.
ஏரிக்கரை மீது விவசாயம் சார்ந்த பணிகளுக்காக மாட்டுவண்டி, டிராக்டர், டில்லர் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, இப்பகுதி ஏரிக்கரை மீது இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, வாகனங்கள் சென்று வர ஏதுவாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.