/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவள்ளூர் மாவட்ட கராத்தே 90 வீரர், வீராங்கனையர் தகுதி
/
திருவள்ளூர் மாவட்ட கராத்தே 90 வீரர், வீராங்கனையர் தகுதி
திருவள்ளூர் மாவட்ட கராத்தே 90 வீரர், வீராங்கனையர் தகுதி
திருவள்ளூர் மாவட்ட கராத்தே 90 வீரர், வீராங்கனையர் தகுதி
ADDED : அக் 28, 2024 11:37 PM

சென்னை: திருவள்ளூர் மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் முதலிடங்களைப் பிடித்து தங்கம் வென்ற, 90 வீரர், வீராங்கனையர், மாநில போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில், 27வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, திருநின்றவூரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், ஆறு வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் என, பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இருபாலரிலும் சேர்த்து, 30, 35, 40, 45 கிலோ என, மொத்தம் 90 வகையாக எடைப் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இரு நாட்கள் நடந்த இப்போட்டியில், இருபாலரிலும் மொத்தம் 90 வீரர், வீராங்கனையர் முதலிடங்களை பிடித்து தங்கம் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜெயா கல்வி குழும சேர்மன் கனகராஜ், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
தங்கம் வென்ற 90 பேரும், 2025 ஜனவரியில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

