/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க நவ. 9ல் சிறப்பு முகாம்கள்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க நவ. 9ல் சிறப்பு முகாம்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க நவ. 9ல் சிறப்பு முகாம்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க நவ. 9ல் சிறப்பு முகாம்கள்
ADDED : அக் 09, 2024 08:13 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய, 4 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆக., 28 முதல் நடைபெற்று வருகிறது.
எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் Voters Help Line என்ற மொபைல் செயலி வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள், இம்மாதம் 29ம் தேதி முதல் நவ.,28ம் தேதி வரை தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம்.
அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில், நவ., மாதம் 9, 10, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

