sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக ... (12.05.2025) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக ... (12.05.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (12.05.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (12.05.2025) காஞ்சிபுரம்


UPDATED : மே 11, 2025 09:21 PM

ADDED : மே 11, 2025 09:03 PM

Google News

UPDATED : மே 11, 2025 09:21 PM ADDED : மே 11, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வைகாசி பிரம்மோத்சவம்

ஹம்ஸ வாகனம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், அதிகாலை 4:00 மணி; சூரிய பிரபை, மாலை 5:30 மணி.

சித்திரை பெருவிழா

ஆள்மேல் பல்லக்கு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை 7:30 மணி; முருக்கடி சேவை தலமகிமை காட்சி, இரவு 8:00 மணி.

* திருவூடல் உத்சவம், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், இளையனார்வேலுார், வாலாஜாபாத், காலை 8:00 மணி; மாவடி சேவை, இரவு 8:00 மணி.

அக்னி வசந்த மஹாபாரத விழா

மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: தவ வேடனும், சிவ வேடனும், சொற்பொழிவாளர்: கோவிந்தராஜி, கவி வாசித்தல்: முனுசாமி, திரவுபதியம்மன் உடனுறை தருமராஜர் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம். மதியம் 1:30 மணி. நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரத நாடகம், தலைப்பு: அர்ச்சுனன் தபசு, காலை 10:00 மணி.

* மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: கானிடை பல கடந்தனர் பாண்டவர்கள், சொற்பொழிவாளர்: அருணாசல அடிகளார், கவிவாசித்தல்: கிராமிய பாடகம் கபாலீஸ்வரன், பாஞ்சாலி அம்மன் கோவில், புள்ளலுார், காஞ்சிபுரம். மதியம் 1:30 மணி; ராணிப்பேட்டை மாவட்டம் பிள்ளையார்குப்பம் ஆயாராம்மன் நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம், தலைப்பு: சுந்தரி மாலை, இரவு 10:00 மணி.

* மஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு: பாண்டவர் கவுரவர் பாரினில் தோற்றம், சொற்பொழிவாளர்: ரத்தின தனஞ்செயன், கவி வாசித்தல்: ராஜநிதி, திரவுபதியம்மன் கோவில், ஓரிக்கை, காஞ்சிபுரம். மதியம் 2:00 மணி.

திருப்பள்ளியெழுச்சி

பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.

கந்தபுராணம் முற்றோதுதல்

வைகாசி விசாகத்தையொட்டி கந்தபுராணம் திருப்புகழ் முற்றோதுதல், ஏற்பாடு: ஏகம்பம் திருமுறை முற்றோதல் அமைப்பு சிவ ரேணுகா, குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை 9:30 மணி.

சித்ரா பவுர்ணமி பாலாபிஷேகம்

நாகாத்தம்மன், கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், பூந்தோட்டம், பூக்கடை சத்திரம், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

புத்த பூர்ணிமா விழா

உலக அமைதிக்கான பவுத்த கொடியேற்றுதல், காஞ்சி புத்தர் கோவில், வையாவூர் சாலை, காஞ்சிபுரம், காலை 9:15 மணி.

பவுர்ணமி சிறப்பு அபிஷேகம்

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

* வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

சிறப்பு வழிபாடு

விசாகம் நட்சத்திரம், இந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

பொது

திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு

பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:00 மணி.

அன்னதானம்

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.

புகைப்பட கண்காட்சி

ஏற்பாடு: ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம், காஞ்சி வரதர் கருடசேவை விழாவை ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள பாரம்பரிய உலக விழாக்களில் சேர்க்க வலியுறுத்தி புகைப்பட கண்காட்சி, தீபாவளி மண்டபம், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us