/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ... (16.10.2025) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக ... (16.10.2025) காஞ்சிபுரம்
ADDED : அக் 15, 2025 08:22 PM
பாலாபிஷேகம்
தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், தன்வந்திரி பாபா கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பஜனை, இரவு 7:00 மணி; ஆரத்தி, இரவு 7:30 மணி; அன்னதானம், இரவு 8:00 மணி.
குருவார சிறப்பு அபிஷேகம்
சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.
குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
சொற்பொழிவு
தலைப்பு: தமிழ்ப் பேச்சிலும் இசையிலும் சிறந்த பொதுப்பெண்கள் அன்பில் காலம் கழித்து வீணான என்னைக் காப்பாற்று முருகா, சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
சிறப்பு வழிபாடு
நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
* வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி
பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
புத்தாக்க பயிற்சி முகாம்
நாட்டு நலப்பணித்திட்ட புதிய தன்னார்வலர்களுக்ககான மாநில அளவிலான புத்தாக்க பயிற்சி முகாம், மஹா ஸ்வாமிகள் கலையரங்கம், சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏனாத்துார், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30-7:30 மணி வரை; மாலை 5:30- 6:45 மணி வரை.
அன்னதானம்
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.