/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாய கள நிலத்தில் கழிப்பறை கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
/
விவசாய கள நிலத்தில் கழிப்பறை கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
விவசாய கள நிலத்தில் கழிப்பறை கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
விவசாய கள நிலத்தில் கழிப்பறை கிராமத்தினர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 23, 2024 06:02 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பட்டா, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுதல் என பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 343 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தண்டலம் கிராமத்தினர் மனு
தண்டலம் கிராமத்தில், பல ஆண்டுகளாகவே, 20 சென்ட் நிலத்தில், விவசாய களமாக பயன்படுத்தி வருகிறோம்.
விவசாய உற்பத்தி பொருட்களை பிரித்து எடுக்கவும், சேமிக்கவும், விதைகளை உலர்த்தி பதப்படுத்த இந்த களம் நிலம் பயன்படுகிறது. இந்த இடத்தில் விவசாய வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில், கிராம தலைவர் அனைவரின் விருப்பத்திற்கு மாறாக பொது கழிப்பறை கட்ட முயற்சி செய்கிறார்.
நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் களம் நிலத்தில், நவீன முறையில் களம் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

