/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரத்து அதிகரிப்பால் விலை சரிவு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனை
/
வரத்து அதிகரிப்பால் விலை சரிவு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் விலை சரிவு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் விலை சரிவு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனை
ADDED : டிச 05, 2024 11:48 PM

காஞ்சிபுரம்,ஆந்திர மாநிலம் பலமநேரி, புங்கனுார், மதனபள்ளி, கர்நாடக மாநிலத்தில் தாவணிகரை மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் மாவட்டத்தில் தக்காளி பயிரிடப் படுகிறது.
இதில், ஆந்திர மாநிலத்தில் விளையும்தக்காளி காஞ்சிபுரம்சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் மழையின்போது, காஞ்சிபுரத்தில் கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், விலைபாதியாக குறைந்துகிலோ 40 ரூபாய்க்குவிற்கப்படுகிறது.
இதுகுறித்து, காஞ்சி புரம் பூக்கடை சத்திரத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி ஹரிமணிகூறியதாவது:
கடந்த 10 நாட்களுக்கு முன், காஞ்சிபுரத்தில் 2 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில்,'பெஞ்சல்' புயலில் பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், காஞ்சிபுரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன், கிலோ தக்காளி 80 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது, வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை பாதியாக குறைந்துள்ளதால், கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.