/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிடப்பில் பொன்னேரிக்கரை படகு குழாம் திட்டம் கண்டுகொள்ளாத சுற்றுலா துறை அதிகாரிகள்
/
கிடப்பில் பொன்னேரிக்கரை படகு குழாம் திட்டம் கண்டுகொள்ளாத சுற்றுலா துறை அதிகாரிகள்
கிடப்பில் பொன்னேரிக்கரை படகு குழாம் திட்டம் கண்டுகொள்ளாத சுற்றுலா துறை அதிகாரிகள்
கிடப்பில் பொன்னேரிக்கரை படகு குழாம் திட்டம் கண்டுகொள்ளாத சுற்றுலா துறை அதிகாரிகள்
ADDED : ஜன 01, 2025 12:41 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம், கடந்த 2019ல் பிரிந்த நிலையில், பல முக்கிய சுற்றுலா தலங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சென்றன. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டது.
பொழுதுபோக்கு
மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில், நுாற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. அனைத்து தரப்பினரும் சென்று பொழுதுபோக்கும் வகையில், சுற்றுலா இடங்கள் இல்லாதது, காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
உள்ளூரில் எந்தவித பொழுதுபோக்கு மையங்களும் இல்லாததால், வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களில் உள்ள பொழுதுபோக்கு இடங்களுக்கு, காஞ்சிபுரம் வாசிகள் சென்று வருகின்றனர்.
சிறியதும், பெரியதுமாக, 700 ஏரிகள் உள்ளதால், 'ஏரிகள் மாவட்டம்' என்ற பெயர் உள்ளது. இந்த ஏரிகளில் சுற்றுலா துறை சார்பில், படகு குழாம் அமைத்து, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.
குறிப்பாக, காஞ்சிபுரம் நகர் அருகே உள்ள பொன்னேரிக்கரை ஏரியில், சுற்றுலா துறை சார்பில் படகு குழாம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வருகிறது. ஆனால், தற்போது வரை சுற்றுலா துறை சார்பில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் இன்றி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் படகு குழாம் அமைக்க அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சுற்றுலா துறை சார்பில், எந்தவித அறிவிப்பும் வெளியாவதில்லை.
காத்திருப்பு
நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை சீரமைத்து, கரைகளை அழகுபடுத்தி, படகு குழாம் அமைத்தால், நகரவாசிகள் பொழுதுபோக்க ஏற்ற இடமாகவும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும். 2026ல் நடைபெறும் சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில் இந்த திட்டம் அறிவிக்க நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

