/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் கொட்டப்பட்-ட கட்டட கழிவு பொருட்களால் போக்குவரத்து நெரிசல்

ADDED : மே 30, 2025 10:37 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பி.எஸ்.கே., தெரு வழியாக சேக்குபேட்டை, சங்கூசாபேட்டை, ரயில்வே சாலை, தாலுகா அலுவலகம், அரசு மருத்துவனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், இரு இடங்களில், சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டட கழிவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, பி.எஸ்.கே., தெருவில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவு பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.