/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்ணீரீல் மூழ்கிய பாலத்தால் போக்குவரத்து துண்டிப்பு
/
தண்ணீரீல் மூழ்கிய பாலத்தால் போக்குவரத்து துண்டிப்பு
தண்ணீரீல் மூழ்கிய பாலத்தால் போக்குவரத்து துண்டிப்பு
தண்ணீரீல் மூழ்கிய பாலத்தால் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 11, 2024 11:20 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் மடுவு வழியாக மதுராந்தகம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது.
இக்கால்வாய் இணைப்பாக, கட்டியாம்பந்தல் சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்தரைப்பாலம் மிகவும் சிறியதாக உள்ளது. இதனால், கால்வாயில் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டால், தரைபாலம் வாயிலாக தண்ணீர் முழுமையாக வெளியேற இயலாத நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இந்நிலையில், உத்திரமேரூர் பகுதியில் நேற்று பெய்த மழையால், இக்கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து கட்டியாம்பந்தல் தரைபாலம் நீரில் மூழ்கியது.
இதனால், கட்டியாம்பந்தல்- வெள்ளப்புத்துார் இடையே போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு, சுற்று வட்டார கிராமத்தினர், வெள்ளப்புத்துார் சாலை வழியாக வேடந்தாங்கல் செல்ல இயலாத நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் பெரிய அளவிலான தரைபாலம் அமைத்து, நிரந்த தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்டியாம்பந்தல் மற்றும் சுற்று வட்டார கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

