/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தி.மு.க., பவள விழாவுக்கு போக்குவரத்து மாற்றம் இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும்
/
தி.மு.க., பவள விழாவுக்கு போக்குவரத்து மாற்றம் இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும்
தி.மு.க., பவள விழாவுக்கு போக்குவரத்து மாற்றம் இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும்
தி.மு.க., பவள விழாவுக்கு போக்குவரத்து மாற்றம் இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும்
ADDED : செப் 27, 2024 07:28 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அருகே, தி.மு.க.,வின் பளவ விழா இன்று (செப்.,28) நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருப்பதாக, அமைச்சர் அன்பரசன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால், எஸ்.பி.,சண்முகம் தலைமையில், நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு சாலையில் இந்த விழா நடைபெற உள்ளதால், இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் இன்று நடைமுறைபடுத்துவதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் நகருக்குள் வரும் வாகனங்கள், மாற்று பாதையான கீழம்பி மற்றும் வெள்ளைகேட் வழியாக காஞ்சிபுரம் நகருக்குள் வர வேண்டும்.
அதேபோல, காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு செல்லும் வாகனங்கள் பழைய ரயில் நிலையம் வழியாக, வையாவூர் கிராமத்தை கடந்து செல்ல வேண்டும்.
சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து விழாவுக்கு வரும் தொண்டர்கள், வாலாஜாபாத், முத்தியால்பேட்டை வழியாக வர வேண்டும். கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டையில் வரும் தொண்டர்கள், கீழம்பி, செவிலிமேடு வழியாக பெரியார் நகரை கடந்து விழாவுக்கு செல்ல வேண்டும்.
விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து வருவோர், செவிலிமேடு, ஓரிக்கை, பெரியார் நகர் வழியாக விழாவுக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று, மதியம் 12:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை அமலில் இருக்கும் என, காவல் துறையினர் தெரிவித்தனர்.