/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குணகரம்பாக்கம் மடுவில் நீர்வரத்து குறைந்திருப்பதால் போக்குவரத்து துவக்கம்

ADDED : நவ 10, 2025 01:03 AM

காஞ்சிபுரம்: குணகரம்பாக்கம் மடுவில், நீர் வரத்து குறைந்திருப்பதால், தரைப்பாலத்தில் வாகனப் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாபுரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் வாயிலாக, 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாலாற்றில், 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கம்பன் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், குணகரம்பாக்கம் மடுவு மீது, இரு தினங்களுக்கு முன் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், நேற்று, கம்பன் கால்வாயில் வெள்ள நீர் குறைந்திருப்பதால், குணகரம்பாக்கம் மடுவின் மீது சென்ற தண்ணீர் குறைந்து உள்ளது.
இதனால், இரு தினங்களாக நின்றுபோன போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது.
மேலும், மீன் பிடிப்போர், வாகனங்களை சுத்தம் செய்வோர் அவரவர் பணிகளை செய்து வருகின்றனர்.