/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறு பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
/
பாலாறு பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜன 13, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பொங்கல் பண்டிகை ஒட்டி, தொடர்ச்சியாக விடுமுறையால், பணி, தொழில் நிமித்தமாக காஞ்சிபுரத்தில் வசிக்கும் வெளி மாவட்டத்தினர், தங்களது சொந்த ஊர்களுக்கு டூ - வீலர், கார், வேன், பேருந்துகளில் புறப்பட்டனர்.
மேலும், வெளிமாவட்டங்களில் வசிப்போர், சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு வந்தனர். ஒரே நேரத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கும், வந்தவாசி சாலை வழியாக வாகன ஓட்டிகள் வந்தனர்.
இதனால், செவிலிமேடு பாலாறு பாலத்தில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காஞ்சிபுரம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

