ADDED : மார் 14, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் வாயிலாக, கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கல்வி நிதி என, இரு வித நிதி பல்வேறு கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதியாக, 60.67 லட்சம் ரூபாய் மற்றும் கூட்டுறவு கல்வி நிதியாக, 41.43 லட்சம் ரூபாய் என, மொத்தம் 1.02 கோடி ரூபாய்க்குரிய காசோலையை, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயாஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளர் சுப்ரமணியன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சத்தியநாராயணன், மேலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

