/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில், பேருந்து நிலையத்தில் தொடரும் திருநங்கையர் அத்துமீறல்
/
கோவில், பேருந்து நிலையத்தில் தொடரும் திருநங்கையர் அத்துமீறல்
கோவில், பேருந்து நிலையத்தில் தொடரும் திருநங்கையர் அத்துமீறல்
கோவில், பேருந்து நிலையத்தில் தொடரும் திருநங்கையர் அத்துமீறல்
ADDED : ஜன 24, 2025 07:32 PM
காஞ்சிபுரம்:கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களிடம், அநாகரிகமாகவும், அவர்களிடம் பணம் கேட்டு திருநங்கையர் பலர் தொந்தரவு செய்வதும் வாடிக்கையாகவே மாறிவிட்டது.
காமாட்சியம்மன் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய இரு கோவில்களின் வாசலில் நின்று கொண்டு, திருநங்கையர் சிலர் பணம் கேட்டு தொந்தரவு செய்வது, பக்தர்களுக்கு எரிச்சலாக உள்ளது.
பணம் கொடுக்காத பக்தர்களை திட்டுவதும், அவர்களிடம் மரியாதை குறைவாக பேசுவதும் தொடர்ந்தபடி உள்ளது. பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவரிடம் பணம் கேட்டு அவர் கொடுக்க மறுத்தததால், இளைஞரிடம் திருநங்கையர் சிலர் பிரச்னை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநங்கையர் பிரச்னை பற்றி, மாதந்தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் சட்டம் - ஒழுங்கு கூட்டத்திலும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இவற்றை போலீசார் கண்டுகொள்வதில்லை என, பக்தர்களும், பயணியரும் புகார் தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலையம், கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு சரிவர இல்லாத காரணத்தாலேயே, திருநங்கையர் பிரச்னை தொடர்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு, வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
அவர்கள் முகம்சுளிக்கும் வகையில், திருநங்கையர் நடந்து கொள்வதை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.