/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் இருந்த மரங்கள் பெயர்த்து மாற்று இடத்தில் நடவு
/
சாலையில் இருந்த மரங்கள் பெயர்த்து மாற்று இடத்தில் நடவு
சாலையில் இருந்த மரங்கள் பெயர்த்து மாற்று இடத்தில் நடவு
சாலையில் இருந்த மரங்கள் பெயர்த்து மாற்று இடத்தில் நடவு
ADDED : நவ 26, 2024 06:25 AM

பொன்னேரி : சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் அருகே, ஹிந்து அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் சிலம்பாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் முகப்பு பகுதியில் உள்ள மண்டபத்தின் ஒரு பகுதி, இணைப்பு சாலை அமையும் இடத்தில் இருந்தது. இணைப்பு சாலைப்பணிக்காக, அதை இடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
கடந்த 19ம் தேதி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் முகப்பு மண்டபத்தின் ஒரு பகுதி பிரத்யேக இயந்திரங்களின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது.
கோவில் அருகில் இணைப்பு சாலை அமையும் பகுதியில் இருந்த பழமையான வேம்பு மற்றும் அரச மரம் ஆகியவையும் வெட்ட திட்டமிடப்பட்டது.
பக்தர்களின், சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, அவற்றின் கிளைகள் முழுமையாக வெட்டப்பட்டன.
பின், மரத்தை சுற்றிலும் மண் தோண்டி வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டது. பொக்லைன், கிரேன் ஆகியவற்றின் உதவியுடன் இரண்டு மரங்களையும், இணைப்பு சாலைக்கு இடையூறு இல்லாத, அதே பகுதியில் மாற்று இடத்தில் ஆழமாக பள்ளம் தோண்டி மாற்று இடத்தில் நடப்பட்டது.
கோவில் நிர்வாகம் தொடர்ந்து மரங்களுக்கு தேவையான உரம், தண்ணீர் விட்டு கண்காணித்து வருகிறது.

